சுதந்திரக்கட்சியில் சந்திரிகாவுக்கு உயர் பதவி – சிரேஷ்ட பிரதிநிதிகள் யோசனை

17

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் உயர்ந்த அரசியல் பொறுப்பொன்றை வழங்க வேண்டும் என அந்த கட்சியின் சில சிரேஷ்ட பிரதிநிதிகள் யோசனை முன்வைத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு சுதந்திரக்கட்சியில் மிக உயர்ந்த பதவி ஒன்றை வழங்க வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மத்தியில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

மகிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க ஆகியோரே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு உயர் பதவியை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

எவ்வாறாயினும் கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகளின் இந்த யோசனையை கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன எதிர்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

Join Our WhatsApp Group