குருந்தூரில் புத்தர்சிலை வைத்து வழிபட்ட விவகாரம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

13

குருந்தூர் மலையில் கல்கமுவ சந்தபோதிதேரர் மற்றும் மறவன்புலவு சச்சிதானந்தன் உள்ளிட்ட குழுவினர் புத்தர்சிலை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரின் முறைப்பாட்டிற்கமைய பொலிஸாரால் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் நீதிமன்றத்திடம் காலஅவகாசம் கோரிய நிலையில் இவ்வாறு தவணையிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில்இ கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி கல்கமுவ சந்தபோதி தேரர், மறவன்புலவு சச்சிதானத்தம் உள்ளிட்ட குழுவினர் புத்தர் சிலையைக் கொண்டுசென்று வைத்து பூசை வழிபாடுகள் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 24 ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் முறைப்பாடொன்றினைப் பதிவு செய்திருந்தனர்.

Join Our WhatsApp Group