24 மணி நேரத்தில் கடல் பிராந்தியத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும்

15

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது சற்று அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பகுதியில் 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்திலும் குறித்த கடற்பரப்புகளில் 55 முதல் 60 கிலோமீற்றர் வேகத்திலும் வீசும்.

மன்னாரில் இருந்து காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் மணித்தியாலத்துக்கு 45 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group