2022ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை தொடர்பான மீள் பரிசீலனை இன்று முதல்…

17

2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பான மீள் பரிசீலனை இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, 2022-2023 கல்வியாண்டில் 45 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்தபட்ச தகுதியைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Join Our WhatsApp Group