ஹாங்காங்கில் திடீர் அடைமழை – பல பகுதிகளில் வெள்ளம்

18

ஹாங்காங்கில் திடீரென்று பெய்த அடைமழையால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.ஈராண்டுகளுக்குப் பிறகு, கடும் மழை, புயல் குறித்து அதிகாரிகள் உயர்நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

நேற்றிரவு (7 செப்டம்பர்) 11 மணி தொடங்கி ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையின் அளவு, 158 மிலிமீட்டருக்கும் மேல் எனப் பதிவானது.சுமார் 140 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு மணி நேரத்தில் பொழிந்த ஆக அதிகமான மழை அது என்று கூறப்பட்டது.வெள்ளத்தில் தெருக்கள் ஆறுகளாக மாறின.வாகனங்களில் இருந்தோர் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.

வெவ்வேறு வட்டாரங்களில் பாதிக்கப்பட்டோரை மீட்க,அவசரகால உதவிச் சேவைகளை வழங்கும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.ஹாங்காங் தலைமை நிர்வாகி ஜான் லீ (John Lee),மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.நகரின் பல பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டிருப்பது கவலை அளிப்பதாகக் கூறினார் திரு லீ.

Join Our WhatsApp Group