ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வங்காட்டும் அதானி குழுமம்

16

எமிரேட்ஸ், டாடா சன்ஸ் மற்றும் அதானி குழுமம் போன்ற பிரபல்யமான நிறுவனங்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் முதலீடுகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

Air India, Air India Express, Vistara மற்றும் AirAsia India ஆகியவற்றின் தாய் நிறுவனமான Tata Sons, நீண்ட காலமாக இலங்கையின் அரசுக்குச் சொந்தமான விமான நிறுவனத்தில் சாத்தியமான முதலீட்டாளராகக் கருதப்படுகிறது. மாறாக, அதானி குழுமத்தின் ஈடுபாடும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது இந்திய விஜயத்தின் போது அதானி குழுவின் தலைவர் கெளதம் அதானியுடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்பில் இலங்கையில் பல்வேறு திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. என்றாலும், ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக எவ்வித தகவல்களையும் அதானி வெளியிடவில்லை.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 43.63 சதவீத பங்குகளை எமிரேட்ஸின் 1998ஆம் ஆண்டு பத்து வருட நிர்வாக சலுகையுடன் வாங்கியிருந்தது.

இருப்பினும், எமிரேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2008இல் எமிரேட்ஸ் ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை. மீண்டும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் முதலீடுகளை மேற்கொள்ள எமிரேட்ஸ் ஆர்வம் காட்டிவருகிறது.

2022ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் தேவையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கப்படுத்தியதுடன், நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை இலாபமீட்டும் நிறுவமாக மாற்ற இதுவே ஒரே வழியெனவும் கூறியிருந்தார்.

தற்போது இந்த நிறுவனத்தில் முதலீடுகளை மேற்கொள்ள பல சர்வதேச நிறுவனங்கள் ஆர்வத்தில் உள்ளன.

குறிப்பாக எமிரேட்ஸ், டாடா சன்ஸ் மற்றும் அதானி குழுமம் போன்ற நிறுவனங்கள் முதலீட்டாளர்களை மேற்கொள்வதில் ஆர்வமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Join Our WhatsApp Group