மருந்து ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு இதுவரையில் மரண சான்றிதழ்கள் இல்லை

19

அண்மைய தினங்களில் மருந்து ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு இதுவரை மரண சான்றிதழ்கள் கிடைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (07) கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “குறித்த நபர்களின் குடும்பங்களுக்கு ஆறு மாதங்களில் இறப்பு சான்றிதழ் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மக்களுக்கு தற்காலிக இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தில் இந்த விடயங்களை முன்வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group