நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று இடம்பெற்ற சூர்யோற்சவ நிகழ்வுகள்

38

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 19ஆம் நாள் திருவிழாவான இன்று காலை சூர்யோற்சவம் நடைபெற்றது. அதன்படி, இன்று காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான், உள் வீதி உலா வந்து பின்னர் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

நல்லூர் மகோற்சவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, மகோற்சவ திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதேவேளை, நாளைய தினம் (09) காலை 6 மணிக்கு 20ஆம் நாள் திருவிழாவையொட்டி சந்தானகோபாலர் உற்சவம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு கைலாசவாகனம் இடம்பெறவுள்ளது.

மேலும், எதிர்வரும் புதன்கிழமையன்று (13) காலை 7 மணிக்கு தேர் திருவிழாவும் , மறுநாள் வியாழக்கிழமையன்று (14) காலை தீர்த்த திருவிழாவும் நடைபெற்று அன்றைய தினம் மாலை கொடியிறக்கம் இடம்பெற்று மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும்.

Join Our WhatsApp Group