நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு- பாராளுமன்றில் இரகசிய பேச்சுவார்த்தைகள்

45

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது கடந்த இரு நாட்களாக விவாதம் நடைபெற்றுவந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் விவாதம் இடம்பெற்று, மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தீவிரம் காட்டிவருகின்றது. பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது.

ஆளுங்கட்சியும் பேச்சுகளை முன்னெடுத்துவருகின்றது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

எதிர்க்கட்சியில் சிலரும் ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக அரசின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றில் பலகட்ட ரகசிய பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.

ஆளுங்கட்சி இந்த பிரேரணையை தோற்கடிக்கும் என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதுவரை தமது நிலைப்பாட்டை அறிவிக்க வில்லை. தமிழ் தேசிய முன்னணி பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவாக வாக்களிக்கும், இதொகா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Join Our WhatsApp Group