தயாசிறியை தவிர குருநாகல் மாவட்டத்தின் ஏனைய அமைப்பாளர்கள் கொழும்பு அழைப்பு

13

பண்டுவஸ்நுவர தொகுதியை தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குருநாகல் மாவட்ட அனைத்து தொகுதிகளின் அமைப்பாளர்களை இன்று பிற்பகல் கொழும்பு டாலி வீதியில் உள்ள கட்சி தலைமையகத்திற்கு வருமாறு கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பண்டுவஸ்நுவர தொகுதியின் அமைப்பாளராக தயாசிறி ஜயசேகர பதவி வகித்து வருகிறார். தயாசிறி ஜயசேகர, கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குருநாகல் மாவட்ட தொகுதிகளின் அமைப்பாளர்களை அழைத்து கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் கட்சியின் அமைப்பாளர் பதவிகளில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Join Our WhatsApp Group