கைபேசி திருட்டுக்கள்: யாழ்ப்பாணத்தில் இருபல்கலை மாணவர்கள் கைது

48

கைபேசிகளை திருடியவர்கள் என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் தொலைபேசிகளை அபகரித்து விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (07) யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் வைத்து யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் குழு இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் இன்று (08) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Join Our WhatsApp Group