இறைவரி மற்றும் சமூகப் பாதுகாப்பு அறவீடு திருத்தச் சட்டங்கள் இன்று முதல் நடைமுறை

57

**கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

பாராளுமன்றத்தில் நேற்றையதினம் (07) நிறைவேற்றப்பட்ட உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமூலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்த) சட்டமூலம் ஆகியவற்றில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இந்தச் சட்டமூலங்கள் நேற்றும் (07) நேற்றுமுன்தினமும் (06) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இதற்கமைய 2023ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்த) சட்டமாகவும், 2023ஆம் ஆண்டின் 15ஆம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்த) சட்டமாகவும் இச்சட்டங்கள் இன்று முதல் (08) நடைமுறைக்கு வருகின்றன.

Join Our WhatsApp Group