அரசியல் களம்: களைபிடுங்கும் கள அரசியலில் மு,கா முனைப்பு

64

-நிப்ராஸ்

தேர்தலுக்கான சந்தர்ப்பம் அடுத்த ஆண்டில் தவிர்க்க முடியாதுள்ள சூழ்நிலையில்,முஸ்லிம் அரசியற் பரப்பில் புதிய பரபரப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கள நிலவரங்களை கையகப்படுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும் பிரயத்தனங்களில் இறங்கியுள்ளது.

இதற்காக, முதலில் பிரபலங்களை மீள இணைக்கும் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது மூன்று எம்.பிக்களில் ஒருவரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் மீள் வருகையும் கட்சிக்கு புதுத்தெம்பை ஊட்டியுள்ளது. முன்னாள் தலைவர் அஷ்ரபுடன் பாராளுமன்றம் சென்றவர் ஹிஸ்புல்லா. இதனால், தற்போதைய தலைவரை விடவும் கட்சிக்கு மூத்தவராக ஹிஸ்புல்லா கணிக்கப்படுகிறார்.

கட்சியை விட்டு வேறு வழி சென்றிருந்தாலும், புதுக் கட்சியை உருவாக்கி தாய்க்கட்சியை சங்கடப்படுத்தாதவர் என்றொரு பார்வையும் இவர்மீது ள்ளது. இதனால், கிழக்கின் மூலை, முடுக்குகளுக்கெல்லாம் ஹிஸ்புல்லா வையும் அழைத்துச் செல்கிறது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். இவர்களையெல்லாம் ஒரே மேடை யில் காணும் முஸ்லிம்கள் கண்களை நம்ப முடியாமல், கசக்கிக்கசக்கி பார்க்கின்றனராம்.ரவூப்ஹக்கீம் கடந்த காலங்களில் ஹிஸ்புல்லாவை விமர்சித்த சொற்கணைகள் அம்புகள் போல, உள்ளங்களைத் தாக்குவதாக வும் சிலர் சங்கடப்படுகின்றனர். தலைவரும் இனிமேலாவது வாயடக்கத்துடன்தான் விமர்சிக்க வேண்டுமென்கின்றனர் இன்னும் சிலர்.

ஏனெனில்,தக்கெனப் பிழைத்தல் தகாதென அழிதல் என்ற நிலையிலேதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸும் மூச்சுவிடுவதும், வருவது மாக இருக்கிறதாம். இனியென்ன, ஊருக்கூர் ஒவ்வொரு கதைகளை அவிழ்த்து களைபிடுங் கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கள அரசியல்.

Join Our WhatsApp Group