அடுத்த மாதம் விண்வெளியில் துணைக்கோளைப் பாய்ச்சத் திட்டமிடும் தாய்லந்து

16

அடுத்த மாதம் விண்வெளியில் Theos-2 துணைக்கோளைப் பாய்ச்சத் திட்டமிடுவதாகத் தாய்லந்து தெரிவித்துள்ளது.Theos-2 பூமியைக் கண்காணிக்க அனுப்பப்படும் தாய்லந்தின் இரண்டாவது துணைக்கோளம்.

துணைக்கோளைத் தயாரித்து அதனை வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்த பிறகு அது பிரான்ஸிலிருந்து அமெரிக்காவின் தெற்குப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது.துணைக்கோளம், விண்கலத்துடன் இணைக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படும்.

Theos-1 என்று அழைக்கப்படும் தாய்லந்தின் பூமியைக் கண்காணிக்கும் முதல் துணைக்கோளம் 2008ஆம் ஆண்டில் பாய்ச்சப்பட்டது.அது செயல்படக்கூடிய காலம் நிறைவடையவுள்ளது.425 கிலோகிராம் எடைகொண்ட Theos-2 துணைக்கோளம், தாய்லந்தின் விண்வெளித் தொழில்நுட்பத்தையும் தேசிய வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும்.

Join Our WhatsApp Group