மூதூரில் காட்டு யானை தாக்கியதில் 69 வயது முதியவர் உயிரிழப்பு

14

திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த நபர் இன்று (07) அதிகாலை வீட்டை அண்மித்த பகுதியில் தோட்ட பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த போதே யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் தோப்பூர் பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த 69 வயதுடயை முருகுப்பிள்ளை ராசலிங்கம் என்பவராவார். உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதுடன் விசாரணைகளை மூதூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Join Our WhatsApp Group