மனைவி கள்ளத்தொடர்வு – மகளுடன் தற்கொலை செய்துக் கொண்ட கணவர்

85

நபரொருவர் தனது மகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜஎல பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று (06) திருகோணமலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் தனது மகளுடன் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கந்தளாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரும், 6 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு அவர் வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை அறிந்து மனவேதனை அடைந்து தனது மகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Join Our WhatsApp Group