பொது மலசலகூடத்திற்கான கட்டணம் 100/-

20

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பொது மலசலகூடத்தை பயன்படுத்துவதற்காக ஒருவருக்கு ஒரு முறை 100 ரூபா அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பொருளாதார நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்களில் பொருளாதார நிலையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் கழிப்பறை வசதிக்காக 100 ரூபாவினை செலுத்த முடியாமல் சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group