புற்றுநோய் 50 வயதுக்குக் கீழ் உள்ள மக்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது

19

உலகம் முழுவதும் 50 வயதுக்குக் கீழ் உள்ள மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.கடந்த 30 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை கூடியிருப்பதாக ஆய்வு கூறுகிறது.

14 முதல் 49 வயதுடையோர் மத்தியில் புற்றுநோய்ச் சம்பவங்களின் எண்ணிக்கை 80% அதிகரித்துள்ளது.1990இல் 1.82 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டனர்.2019இல் அந்த எண்ணிக்கை 3.26 மில்லியனாக உயர்ந்தது என்று BMJ Oncology சஞ்சிகை குறிப்பிடுகிறது.மிக மோசமான உணவுப் பழக்கம், சிகரெட் புகைத்தல், மதுபானம் அருந்துதல் ஆகியவை அவ்வயதினருக்குப் புற்றுநோய் ஏற்பட முக்கியக் காரணங்களாக உள்ளன என்று ஆய்வுக் குழு கூறியது.

எனினும் குறைந்த வயதில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இன்னும் தெளிவான காரணம் தெரியவில்லை என்று அக்குழு தெரிவித்தது.2019ஆம் ஆண்டு 50 வயதை எட்டாதவர்களில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் புற்றுநோயால் மாண்டனர்.

1990ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க அது 28% அதிகம்.மார்பகம், மூச்சுக்குழாய், நுரையீரல், குடல், வயிறு ஆகிய உடல்பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் மிகவும் ஆபத்தானவை.கடந்த 30 ஆண்டுகளில் மார்பகப் புற்றுநோய்தான் ஆக அதிகமாக அடையாளங்காணப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group