புத்தளம் சிரம்பியடிக்கு (Sirambiadiya) சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் கலாச்சார நிலையம்

17

புத்தளம் சிரம்பியடி Sirambiadiya பிரதேசத்தில் வசிக்கும் ஆபிரிக்க வம்சாவளியுடன் தொடர்புபட்ட ,இலங்கையர்களுக்கு சர்வதேச கவனத்தை ஈர்க்கக்கூடிய கலாசார நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார தெரிவித்தார். சிரம்பியடி உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இலங்கை சனத்தொகை தொடர்பிலான ஆய்வுக்காக அமைச்சர் அப்பகுதிக்கு சென்றிருந்த போது , கலாசார நிலையம் அமைப்பது தொடர்பில் உறுதி தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக இந்த மக்களின் செயலூக்கமான பங்களிப்பைப் பெறுவதற்கும், அந்த மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் ,அவர்களது கலாசாரத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கும் தேவையான பங்களிப்பை வழங்குவதுடன், சர்வதேசத்தை வெற்றி கொள்வதற்குமாக இந்த கலாசார நிலையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்

ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இலங்கை மக்களின் வரலாறு, அவர்களின் தற்போதைய தொழில் நிலைமைகள் மற்றும் கலாசார அம்சங்கள் தொடர்பாக அங்கு வாழும் முதியவர்களுடன் விரிவாக கலந்துரையாடி தகவல்களைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் ,இளம் தலைமுறையின் செயல்திறன் தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.

Join Our WhatsApp Group