பணியின்போது அரசு அதிகாரிகள் ஐ போன் பயன்படுத்த தடை – சீனா அதிரடி

13

உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு.சீனாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சீனர்களில் பலரும் ஐ-போன் மற்றும் ஐ-பேடு சாதனங்களை மிகவும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, ஆப்பிள் நிறுவனம் அடுத்த வாரம் புதிய ஐ போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.இந்நிலையில், வேலை நேரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்களையும் அந்நிய நாட்டு முத்திரையிலான கருவிகளையும் பயன்படுத்த வேண்டாம் என அரசு ஊழியர்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது. அத்தகைய கருவிகளை அலுவலகத்துக்குக் கொண்டுவர வேண்டாம் என ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என வால் ஸ்ட்ரீட் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இது கவலையை அளிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் சீனா-அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.ஐ போன்கள், ஐ பேடுகளை வேலை நோக்கங்களுக்காக அரசு ஊழியர்கள் பயன்படுத்தக் கூடாது என ரஷியா கடந்த மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group