தென் கொரியாவில் வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள்

16

இலங்கையில் இருந்து தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்பிற்காக இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் 4 ஆயிரத்து 556 இலங்கையர்களை தென் கொரியாவிற்கு வேலைக்காக அனுப்பி வைத்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

குறித்த எண்ணிக்கையில் 3,565 தொழிலாளர்கள் தென் கொரியாவில் முதல் முறையாக வேலைக்குச் சென்றுள்ளனர்.

இவர்கள் உற்பத்தித் துறை, மீன்பிடித் துறை, கட்டுமானத் துறை மற்றும் விவசாயத் துறை ஆகிய துறைகளுக்கே வேலைக்காக வெளியேறியுள்ளனர்.

இவர்களில் 4462 ஆண் ஊழியர்களும் 94 பெண் ஊழியர்களுமாக உற்பத்தித் துறைக்கு 3,774 பேரும், மீன்பிடித் துறைக்கு 639 பேரும், கட்டுமானத் துறைக்கு 140 பேரும், விவசாயத் துறைக்கு 3 பேரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமையன்றும் 170 இளைஞர்கள் தென்கொரியாவிற்கு வேலை வாய்ப்பிற்காக புறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group