தனது மகள் தயாரிக்கும் வெப்தொடரை தொடங்கி வைத்த ரஜினி

23

ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா.
இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார். நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் கோச்சடையான்’, தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ள சவுந்தர்யா, அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து ‘கேங்க்ஸ்’ என்ற புதிய வெப் தொடர் ஒன்றை தயாரிக்கிறார்.

நோவா ஆபிரஹாம் இயக்கும் இந்த வெப்தொடரில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘கேங்க்ஸ்’ வெப்தொடரின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதன் படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் கிளாப் போர்ட் அடித்து தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை சவுந்தர்யா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Join Our WhatsApp Group