ஜி20 விருந்தில் பங்கேற்க கவுதம் அதானி, முகேஷ் அம்பானிக்கு அழைப்பு

19

உலக தலைவர்களுக்கான ஜி20 விருந்து சனிக்கிழமை இரவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளனர்.

இந்த ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என அந்நாட்டின் சார்பில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவிற்கு வரவுள்ள உலக தலைவர்களை உபசரிக்கும் விதமாக வரும் சனிக்கிழமை இரவு ஜி20 விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த விருந்திற்கு சுமார் 500 தொழிலதிபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில், டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், கோடீஸ்வரர் குமார் மங்கலம் பிர்லா, பார்தி ஏர்டெல் நிறுவனர்- தலைவர் சுனில் மிட்டல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி குழுமத் தலைவர் ஆகியோரும் உள்ளடங்குவர்.

Join Our WhatsApp Group