செனல் – 4 வீடியோ தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் – சரத் பொன்சேகா

21

செனல் – 4 வீடியோ தொடர்பாகவும் அதில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் ராணுவ தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சற்று நேரத்துக்கு முன் கருத்து தெரிவித்த அவர், வெளியாகி இருக்கின்ற இந்த விடயங்கள் முழுமையாக ஆராயப்பட வேண்டும். பாராளுமன்றத் தெரிவிக்குழு மூலமாகவோ அல்லது ஆணைக்குழு அமைப்பதன் மூலமாகவோ இதற்கு தீர்வு காண முடியாது.

ஆகவே சர்வதேச விசாரணை ஒன்று நடத்துவதன் மூலமே உண்மையை கண்டறிய முடியும் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இந்த வீடியோவில் சொல்லப்பட்டிருக்கின்ற உளவு பிரிவு பணிப்பாளரான சுரேஷ் சாலே என்பவர் மிக மோசமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தவர் என்பது தெரியும்.. இவர் ராஜபக்ச குடும்பத்தோடு மிகவும் நெருங்கிய செயல்பாடுகள் ஈடுபட்டு மோசமான செயல்களிலும் ஈடுபட்டவர் எனத் சரத் பொன்சேகா கூறினார்.

Join Our WhatsApp Group