இலங்கையுடனான போட்டி குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடு

17

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு  இடையில் கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற போட்டி குறித்து முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்  சபையினால் ஆசிய கிரிக்கெட் சபைக்கு இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாக  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்  சபை  ஊடக பேச்சாளர் முகமது நசீம் சதாத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்தாம் திகதி  பாகிஸ்தானில் உள்ள Gaddafi மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதற்கமைய 50 ஓவர்க்ளின் நிறைவில் இலங்கை அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 291 ஓட்டங்களை பெற்றது. அதன்படி,  சூப்பர் 4 சுற்று தகுதி பெற 292 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 37.1 ஓவர் நிறைவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 290 ஓட்டங்களை பெற்றது.

இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. 37.1 ஓவரில் உள்ள மூன்று பந்துகளில் ஏதேனும் ஒரு பந்திற்கு ஓட்டங்களை பதிவு செய்யதால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது என்று வர்ணனையாளர்கள் போட்டியின் இடைநடுவே அறிவித்தனர்.

இருபினும் அடுத்த மூன்று பந்துகளில் 295ஓட்டங்களை  எட்டினால், சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என களத்தில் உள்ள  ஆப்கானிஸ்தான் வீரர்கள் அறிந்திருக்கவில்லை என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்  சபை  ஊடக பேச்சாளர் முகமது நசீம் சதாத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் எனவும் மாறாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை  ஊழியர்கள் அலட்சியமாக இருப்பது நிரூபிக்கப்பட்டாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சஆப்கானிஸ்தான் கிரிக்கெட்  சபை  ஊடக பேச்சாளர் முகமது நசீம் சதாத் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி பங்களாதேஷ் அணியிடம் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது. சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 37.1ஓவரில் ஆட்டத்தை நிறைவு செய்து  வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது

Join Our WhatsApp Group