இலங்கையில் குறைவடைந்த மதுபாவனை – ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது

27

நாட்டில் பெரும்பான்மை மக்கள் கடந்த 12 மாதங்களில் எந்த வகையான மதுபானத்தினையும் பயன்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது. இலங்கை முழுவதும் 70.9 வீதமான மக்கள் இவ்வாறு எந்த வகையான மதுபானத்தினையும் அருந்தவில்லை என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் நடத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் 29.1 வீதமான மக்களே மதுபானம் அருந்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த தொகையில் 43.3 வீதமானவர்கள் ஆண்கள் எனவும் 2.8 வீதமாணவிகளே பெண்கள் எனவும் மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் மதுபானங்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே மதுபானம் அருந்துவோரின் தொகை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் 72 வீதமானவர்கள் மதுபானத்தில் விலையினை அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Join Our WhatsApp Group