ஃபுக்குஷிமாவிலிருந்து வரும் உணவு பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க விருந்து வைத்த ஜப்பானியத் தூதர்

16

ஜப்பானின் ஃபுக்குஷிமாவிலிருந்து வரும் உணவு பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஜப்பானியத் தூதர் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.அந்த விருந்து பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸில் நடைபெற்றது.

ஃபுக்குஷிமா அணுவாலையிலிருந்து கழிவுநீர் பசிஃபிக் கடலுக்குள் வெளியேற்றப்பட்டு கிட்டத்தட்ட 2 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.பிரபல சூஷியிலிருந்து சாக்கே மதுபானம் வரை ஃபுக்குஷிமாவிலிருந்து தருவிக்கப்பட்ட பல உணவு வகைகள் விருந்தில் படைக்கப்பட்டன.விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான அரசதந்திரிகள் கலந்துகொண்டனர்.

மக்களிடையே எழும் சந்தேகங்கள் சில சமயம் அறிவியல் தரவுகளின் அடிப்படையில் அமைவதில்லை என்று ஜப்பானியத் தூதர் யாசுஷி மசாக்கி (Yasushi Masaki)கூறினார்.ஜப்பானிய உணவு இறக்குமதி மீதான தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் ஜூலை மாதம் அகற்றியது.

கழிவுநீர் கடலில் வெளியேற்றப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பாகவே அது அவ்வாறு செய்தது.அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் அந்த முடிவை எடுத்ததாக ஒன்றியம் கூறியது.

Join Our WhatsApp Group