ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு பூட்டு

66

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகம் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதான வாயில் பூட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு கட்சி உறுப்புரிமையிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்று (05) அறிவித்துள்ளார்.

இதன்படி, கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகரவும் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Join Our WhatsApp Group