ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியில் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் பதவிக்கு சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரக்கட்சியின் 72 ஆவது தேசிய மாநாடு நடந்து முடிந்த கையோடு இந்த பதவிநீக்கத்தை கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன அறிவித்திருக்கிறார்.