பல்கலைக்கழக அனுமதி தொடர்பான விசேட அறிவிப்பு

22

2022/23 கல்வியாண்டில் பல்கலைக்கழக கல்விக்காக 45,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் விண்ணப்பத்துடன் கூடிய கையேட்டை அங்கீகரிக்கப்பட்ட புத்தகக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

Join Our WhatsApp Group