நான்கு வயது சிறுமி மீது கொடூர தாக்குதல்:தாய் கைது!

27

நான்கு வயது சிறுமியை தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தாய் மற்றும் தாயின் பிரிந்த கணவன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தொரட்டியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களான தம்பதியினர் குருநாகல் அலகொல்தெனிய மோடர்வத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.சிறுமியின் முகம், முதுகு மற்றும் கை,கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்,கண் பகுதி சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல நாட்களாக வீட்டில் வைத்து சிறுமி தாக்கப்பட்டு வந்த நிலையில், அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், சிறுமி சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபரான தாயாருக்கு முறைகேடான கணவனால் எட்டு மாதக் குழந்தையொன்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Join Our WhatsApp Group