தாய்லாந்தில் முத்துராஜாவுக்கு சிகிச்சை அளிக்க இலங்கையிலிருந்து மருத்துவக் குழு விரைவு

61
  • தாய்லாந்து மருத்துவ குழுவுடன் இணைந்து சிகிச்சை முன்னெடுக்க திட்டம்

இலங்கையில் உள்ள தாய்லாந்து தூதரகத்தின் அழைப்பின்பேரில் யானை முத்துராஜாவுக்கு சிகிச்சை அளிக்கும் குழுவில் ஐந்து
பேர் கொண்ட குழு திங்கட் கிழமை (04) தாய்லாந்துக்கு புறப்பட்டது. தேசிய விலங்கியல் திணைக்களத்தின் விலங்குகள் சுகாதார பணிப்பாளர் டாக்டர் சந்தன ராஜபக்ஷ, கால்நடை மருத்துவர் மதுஷா பெரேரா மற்றும் மூத்த விலங்கு பாதுகாவலர் நடுன் அதுலத்முதலி ஆகியோருடன் தாய்லாந்து தூதரகத்தின் இரண்டு அதிகாரிகள் இந்த குழுவில் உள்ளனர்.

முத்துராஜாவை நேசிக்கும் பெருந்தொகையான மக்களின் நல்வாழ்த்துக்களுடன் முத்துராஜாவின் தற்போதைய நிலை குறித்து அறிய இலங்கையர்கள் தாய்லாந்து செல்வதற்கு இது ஒரு சிறப்பான சந்தர்ப்பம் என தேசிய மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்தியர் மதுஷா பெரேரா தெரிவித்தார்.

தாய்லாந்து செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது கால்நடை வைத்தியர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் கூறியதாவது: முத்துராஜாவுக்கு உயிரியல் பூங்காவில் சுமார் ஒன்பது ஆண்டுகளாக சிகிச்சை அளித்த மருத்துவர் என்ற முறையில், இந்த சிறப்பான வாய்ப்பு கிடைத்ததில் இன்று மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முத்துராஜா சிகிச்சையின் மூலம் காட்டு யானைகளின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முதல் படியாக இந்தப் பயணம் அமையும்” என்றார்.

தனிமைப்படுத்தலுக்குப் பிறகு தாய்லாந்தில் உள்ள யானை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட முத்துராஜாவின் சிகிச்சைக்கு ஆதரவளிப்பது இந்த பயணத்தின் மற்றொரு நோக்கம் என்று அவர் மேலும் கூறினார்.

Join Our WhatsApp Group