தனுஷின் 50வது படத்தில் இணைந்த வரலட்சுமி

41

நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷரா விஜயன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் வட சென்னை பாணியில் அரங்கம் அமைத்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் நித்யா மேனன் நடித்து வருவதாக தகவல் வந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை வரலட்சுமி இணைந்துள்ளாராம். மேலும், இது நெகட்டிவ் கதாபாத்திரம் ஆக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வரலட்சுமி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group