தங்கல்லை உள்ளிட்ட இரு பிரதேசங்களை மையமாக கொண்ட அடுக்குமாடித் திட்ட பணிகள் வருட இறுதியில் நிறைவு

19

தங்கல்லை, மொரட்டுவ, ரன்பொகுனுகம ஆகிய பிரதேசங்களை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடித் திட்டத்தின் பணிகளை இந்த வருடத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, இந்த மூன்று வீட்டுத் திட்டங்களும் 132 வீட்டு அலகுகளைக் கொண்டிருக்கின்றன.

அதாவது தங்கல்லை அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு 30 வீடுகளும், ரன்பொகுனுகம வீடமைப்பு திட்டத்திற்கு 72 வீடுகளும், மொரட்டுவ வீடமைப்பு திட்டத்திற்கு 30 வீடமைப்புகளும் அமைக்கப்படவுள்ளன.

இந்த மூன்று வீடமைப்புத் திட்டங்களின் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

எஞ்சிய பணிகளையும் இந்த ஆண்டிற்குள் நிறைவு செய்து, விரைவில் மக்களிடம் ஒப்படைக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் தனியார் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.

இங்குள்ள கட்டுமானப் பணிகள் கடந்த 2022ஆம் ஆண்டு நிறைவடையவிருந்த போதிலும், கொரோனா தொற்று, அரகலய , பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் குறித்த நேரத்தில் திட்டங்களை முடிக்க முடியவில்லை என தேசிய வீடமைப்பு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group