சூடானில் உள்நாட்டு போரால் 48 லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர்: ஐ.நா. தகவல்

44
  • சூடானில் ராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது.
  • ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்தனர்.

கார்டூம்:

சூடானில் ராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 6 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்தனர்.

அந்தவகையில் சூடான் உள்நாட்டு போரால் சுமார் 48 லட்சம் பேர் தங்களது சொந்த பகுதிகளை விட்டு இடம்பெயர்ந்ததாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சூடானில் ராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது.

Join Our WhatsApp Group