சிப்ஸைச் சாப்பிட்டு உயிரிழந்த இளையர்

17

அமெரிக்காவின் மசச்சூசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் மிதமிஞ்சிய கார மிளகைக் கொண்ட ‘Paqui Chip’ எனும் சிப்ஸைச் சாப்பிட்ட பிறகு இளையர் ஒருவர் மாண்டார்.அவரின் பெயர் வொலொபா ஹாரிஸ் (Wolobah Harris).சிப்ஸைப் பள்ளியில் சாப்பிட்ட பிறகு அவருக்கு வயிற்று வலி வந்ததாக அவரின் தாயார் NBC 10 Boston செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் அந்த சிப்ஸ்தான் அவருடைய மரணத்திற்குக் காரணம் என்று இளையரின் குடும்பத்தார் நம்புகின்றனர்.பள்ளி முடிந்த பிறகு, ஹாரிஸின் குடும்பத்தார் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவர் நன்றாக இருந்தார்.ஆனால் கூடைப்பந்து விளையாடக் கிளம்புவதற்கு முன்னர் ஹாரிஸ் மயங்கிவிழுந்ததாக அவருடைய தாயார் கூறினார்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹாரிஸ், அங்கு மாண்டார். பிரேதப் பரிசோதனை நிலுவையில் உள்ளது.மரணம் ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.’One Chip Challenge’ எனும் சவாலை 2016ஆம் ஆண்டு, ஒரு விளம்பர இயக்கமாக Paqui நிறுவனம் அறிமுகப்படுத்தியது.பின்னர் அது இளையர்களிடையே பிரபலமானது.அந்தச் சிப்ஸ் Carolina Reaper எனும் மிளகுச் சுவையைக் கொண்டது.அது உலகில் ஆக அதிகக் காரமுடைய மிளகு.இளையர்கள் அதைச் சாப்பிட்ட பிறகு, எவ்வளவு நேரத்துக்குத் தண்ணீர் அருந்தாமலோ மற்ற உணவு எதனையும் சாப்பிடாமலோ இருக்கமுடியும் என்பதைக் காணொளி எடுக்கின்றனர்.

Join Our WhatsApp Group