சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி நான் தர்றேன்… சீமான் அதிரடி!

33

தமிழக அமைச்சர் உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்த சாமியாரின் தலையை சீவினால் 100 கோடி ரூபாய் தருகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் சனாதனம் ஒழிப்பு மாநாடு செப்டம்பர் 2-ம் திகதி நடந்தது.

அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கொசு, டெங்கு, கொரோனா, மலேரியா போன்றவற்றை எதிர்க்கக் கூடாது. அவற்றை ஒழிக்க வேண்டும். சனாதனமும் இப்படித்தான். சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும்” என பேசினார்.

இதற்கு இந்தியா முழுவதும் பா.ஜ.க., இந்து அமைப்புகளால் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில், அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி கொடுப்பதாக அறிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ”என் தலையை சீவுவதற்கு ரூ.10 கோடி தருவதாக தெரிவித்திருக்கிறார். அப்படியெல்லாம் தரத் தேவையில்லை. 10 ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே எனது தலையை சீவிக்கொள்வேன்” எனக் கிண்டலாக பதிலளித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யாவின் தலையை சீவினால், தான் 100 கோடி தருகிறேன். தலையை வெட்டுவேன், நாக்கை வெட்டுவேன் என்று கூறுபவர்கள் சாமியார் அல்ல கசாப்பு கடைக்காரர்கள்.

மானிட பிறப்பில் பாகுபாடு பார்ப்பவனை நான் எதிரியாக கருதுகிறேன். அந்த வகையில் சனாதனத்தை எதிர்க்கிறேன்” என கூறினார்.

Join Our WhatsApp Group