கொழும்பில் பேரை வாவியை சுத்தப்படுத்தும் செயல் திட்டம் நாளை ஆரம்பம்

55

கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேரை வாவியின் கால்வாயை சுத்தப்படுத்தி அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை (07) காலை 8.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இது வண. கங்காராமய விகாரையின் கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் மற்றும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர்.

இலங்கை நில அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், இலங்கை துறைமுக அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை காலநிலை நிதியம் (தனியார்) நிறுவனம் மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியவற்றின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கும்.

மேற்படி நிறுவனங்களால் பரிந்துரைக்கப்படும் பிரதிநிதிகள், திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் வசதிகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கும் பணி ஒப்படைக்கப்படும். திட்டத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட Groepo Pte நிறுவனத்தின் உள்ளூர் துணை நிறுவனமான Groepo Lanka Bioscience (Pvt) Ltd மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

Join Our WhatsApp Group