ஐ.தே.கட்சியின் 77 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று

36

ஐக்கிய தேசியக் கட்சியின் 77 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சமய நிகழ்வுகள் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன், கட்சியின் செயற்பாடுகள் இலத்திரனியல் (டிஜிட்டல்) மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, கட்சி உறுப்பினர்கள் இணையத்தளம் மூலம் கட்சியுடன் இணைவதற்கான சந்தர்ப்பம் இன்று முதல் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1946 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவினால் ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

Join Our WhatsApp Group