உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; இரு இளைஞர்கள் பலி

55

ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாங்குளம் முல்லைத்தீவு வீதியின் 21வது கிலோ மீற்றர் அண்மித்த பகுதியில், மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் இடதுபுறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இன்று (06) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முள்ளியவளை பகுதியை சேர்ந்த 23 மற்றும் 24 வயதான இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரின் சடலங்கள் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Join Our WhatsApp Group