இ.மி.ச – மறுசீரமைப்பு சட்டமூலம் அக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில்

56

**இனி நிலக்கரி ஆலைகள் இல்லை என அரசு தெரிவிப்பு

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலம் அடுத்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டதன் பின்னர் குறித்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இ.மி. சபையின் 24,000 ஊழியர்களின் வினைத்திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாகவும், எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். எப்போதாவது தொழிலாளர்களை அவுட்சோர்சிங் செய்வதால் அது வாரியத்திற்கு பெரும் சுமையாக இருக்கும் என்றார். இலங்கையில் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க வேண்டாம் என அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

“சம்பூரில் நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு முன்னர் இருந்த திட்டத்திற்கு பதிலாக சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கப்படும்” என்றும் அவர் கூறினார். SJB பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Join Our WhatsApp Group