ஆபாச செய்கை காட்டிய நபர் – விரைந்து வீடியோ பதிவு செய்து ஆதாரமாக்கிய 5-வயது சிறுமி

43

அமெரிக்காவின் தென்கிழக்கின் ஓரத்தில் உள்ளது புளோரிடா மாநிலம்.இம்மாநிலத்தில் உள்ள ஆர்லேண்டோ பகுதியில் சமர்செட் அபார்ட்மென்ட்ஸ் எனும் பெரும் குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மையப்பகுதியில் திறந்தவெளியில் உள்ள பூங்காவில் அங்குள்ள குழந்தைகள் விளையாடுவது வழக்கம்.

இங்குள்ள ஒரு வீட்டில் தனது பாட்டியின் பராமரிப்புக்காக கார்லோஸ் ரிவெரா லூசியானோ எனும் 46 வயது ஆண் சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் கண்ணாடி கதவின் வழியாக ஒரு 5 வயது சிறுமி தென்பட்டிருக்கிறாள். அவளை பார்த்து லூசியானோ, காற்றில் முத்தங்களை பறக்க விட்டார். பிறகு தன் உடலை ஆபாசமாக வெளிப்படுத்தும் செய்கைகளிலும் ஈடுபட்டார்.இச்செயலை அச்சிறுமி தனது சகோதரியின் மொபைல் போனில் கார்லோசிற்கு தெரியாமல் புத்திசாலித்தனமாக உடனடியாக வீடியோ படம் பிடித்தார்.

இந்த வீடியோவை கண்ட அச்சிறுமியின் தாயார் அதிர்ச்சியடைந்து, உடனே அமெரிக்காவில் அவசர உதவிக்கான எண்ணான 911-ஐ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர், அந்த வீடியோவை கண்டு அதில் உள்ள கார்லோசின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும், அவர்கள் அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து பெற்றோர்களிடமும் விழிப்புணர்வுக்காக இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

இக்குற்றச்சாட்டை மறுத்த கார்லோஸ் தன்னிடமும் இது குறித்த வீடியோ உள்ளதாக கூறினார். ஆனால், அவரால் காவலர்களிடம் எந்த வீடியோவும் சமர்ப்பிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் ஆரஞ்ச் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டார்.அந்த 5-வயது சிறுமியின் புத்திசாலித்தனத்தை அங்குள்ள பலரும் பாராட்டி வருகின்றனர்.

Join Our WhatsApp Group