ஆசாத் மௌலானாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் பிள்ளையான்

73

பிள்ளையான் தனது முன்னாள் பேச்சாளரான ஆசாத் மௌலானா வெளிநாட்டில் தனது புகலிடக் கோரிக்கையை வலுப்படுத்துவதற்காக பொய் சொல்கின்றார் என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள பிள்ளையான் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது கட்சி பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்காக எப்போதும் பயன்படுத்தப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளர் சனல் 4 வீடியோவில் வெளியிட்டுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரிகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினை சந்தித்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group