04 ஆண்டுகளுக்கு பிறகு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட ரயில் தண்டவாளங்கள்

55

மேல்மாகாணத்தில் 200 மின்சார பஸ்களை கொள்வனவு செய்ய முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். 2030 ஆம் ஆண்டளவில் உலகெங்கிலும் உள்ள அனைத்து பொதுப் போக்குவரத்திலும் எரிபொருட்கள் அற்றதாக அமையும் உலக உடன்படிக்கையின் பிரகாரம் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

‘நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை’ எனும் தொனிப்பொருளில் நேற்று (4) ஜனாதிபதியின் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த தகவல்களைத் தெரிவித்தார்.

அமைச்சர் கலாநிதி குணவர்தன மேலும் கூறியதாவது: மேல் மாகாணத்திற்கு 200 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக, ஆர்வத்தின் வெளிப்பாடுகள் அழைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கூட்டு முயற்சியாக இது செயல்படுத்தப்படும். மேலும், முதலீட்டாளர்கள் சார்ஜிங் பாயின்ட்களை நிறுவ அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“முதலீட்டாளர் முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கப்படுவார். அதன்பின், குறிப்பிட்ட காலத்திற்குள், பேருந்துகளின் உரிமை அரசால் கையகப்படுத்தப்படும். சீனா மற்றும் கொரியா உட்பட உலகின் எந்த நாடும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இது ஒரு முதலீட்டு வாய்ப்பு.” என அவர் கூறினார்

Join Our WhatsApp Group