ஷாருக்கானின் படம் வெளியாவதற்கு முன்பே 500,000 நுழைவுச்சீட்டுகள் விற்பனை

17

இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர் ஷாருக்கானின் ஜவான் (Jawan) திரைப்படம் இந்த வாரம் வியாழக்கிழமை (7 செப்டம்பர்) வெளியாகவுள்ளது.அதற்குள் இந்தியாவில் மட்டும் படத்திற்கான சுமார் 500,000 நுழைவுச்சீட்டுகள் விற்பனையாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அனைத்தும் முதல் நாளன்று படத்தைப் பார்ப்பதற்கான நுழைவுச்சீட்டுகள் என்று Hindustan Times செய்தி நிறுவனம் தெரிவித்தது.அட்லி இயக்கியிருக்கும் ஜவான் படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு முதலியோரும் நடித்திருக்கின்றனர்.ஜவான் படம் பெரிய அளவில் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our WhatsApp Group