ரஷ்யா-உக்ரேன் போரில் வடகொரியா ஈடுபடுமா?

15

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான போரில் வடகொரியா ஈடுபடக்கூடும் எனும் அக்கறை அதிகரித்துள்ளது.இந்த மாதம் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் (Kim Jong Un) ரஷ்யா செல்ல திட்டமிட்டிருப்பதாக The New York Times நாளேடு குறிப்பிட்டது.

அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் ஆயுத ஒப்பந்தம் பற்றிக் கலந்துரையாடுவார் என்று கூறப்படுகிறது.வரும் ஞாயிற்றுக்கிழமை (10 செப்டம்பர்) தொடங்கும் மாநாட்டில் இரு தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.திரு. புட்டினுக்குக் குண்டுகளும், கவச வாகனங்களைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளும் தேவைப்படுகிறது.

அதற்குக் கைமாறாக, திரு. கிம் மேம்பட்ட செயற்கை துணைல்கோளத் தொழில்நுட்பம், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், உணவு நிவாரணம் ஆகியவற்றை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இரு நாட்டுத் தலைவர்களும் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகச் சென்ற வாரம் வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.ஆயுத ஒப்பந்தம் குறித்து இருவரும் கடிதங்களைப் பரிமாறிக்கொண்டதாக அது எச்சரித்திருந்தது.

இதற்கு முன்னதாக, உக்ரேனின் போர்க்களத்தில் வடகொரியாவைச் சேர்ந்த ஆயுதங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.ஜூலையில், உக்ரேனியர்கள் பயன்படுத்திய ஏவுகணை, வடகொரியாவைச் சேர்ந்தவை என்று Financial Times நாளேடு தெரிவித்திருந்தது.அவை ரஷ்யப் படைகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவையாக இருக்கலாம் என்று உக்ரேனியத் தற்காப்பு அமைச்சு சொன்னது.

Join Our WhatsApp Group