மூன்று இலட்சத்தினை தாண்டிய உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள்

47

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து இருபத்து மூவாயிரத்து ஒன்பது நூற்று பதின்மூன்று விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த பரீட்சை முடிவுகள் வெளியானதும், இரண்டாம் அல்லது மூன்றாம் முறை தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த பரீட்சையை ஒக்டோபர் மாதம் நடத்த பரீட்சைத்துறை ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. ஆனால் 2022 உயர்தரப் பரீட்சை திருத்தப்பணிகள் தாமதமானதால் 2023 நவம்பர் 27 முதல் டிசம்பர் 21 வரை பரீட்சை நடைபெறும் என ஜூலை 17ம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group