முல்லை – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்

17

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய இன்று (05) ஆரம்பமாகவுள்ளது.

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக, வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அன்றைய தினம் முன்னிலையாகியிருந்தனர்.

சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புக்களுடன் இன்று முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனவே இன்று கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளன.

Join Our WhatsApp Group