மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு உடல்நலக் குறைவு

14

மியன்மாரில் ராணுவத்தால் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi)அம்மையார், உடல் நலம் குன்றியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.சிறைத்துறை மருத்துவரால் அவருக்குச் சிகிச்சையளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

வெளிப்புற மருத்துவரின் ஆலோசனையைப் பெற விடுக்கப்பட்ட கோரிக்கை, ராணுவ ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.ஈறுகளில் ஏற்பட்ட வீக்கத்தால் அவர் வேதனையுறுவதாகவும், அவரால் சரியாகச் சாப்பிட முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

பதவியிலிருந்து அகற்றப்பட்டு நாடு கடந்து செயல்படும் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தைச் சேர்ந்த நபர் அந்தத் தகவல்களை வெளியிட்டார்.அதுபற்றி விசாரிப்பதற்காக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் விடுத்த தொலைபேசி அழைப்பை, ராணுவ அரசாங்கப் பேச்சாளர் ஏற்கவில்லை.

Join Our WhatsApp Group