குழந்தையின் பாலினத்தைத் தெரிவிக்க வந்த விமானம் விழுந்து நொறுங்கியது… விமானி மாண்டார்

25

ஆண் குழந்தையா? பெண் குழந்தையா?அதைத் தெரிவிக்க வந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி மாண்டார்.

மெக்சிகோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (3 செப்டம்பர்), குழந்தையின் பாலினத்தைத் தெரிந்துகொள்ளச் சிறிய விருந்துக்கு ஒரு தம்பதியர் ஏற்பாடு செய்திருந்தனர்.இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், இளஞ்சிவப்புப் புகையை வெளியேற்றியபடி விமானம் தம்பதியையும் விருந்தினர்களையும் கடந்து செல்கிறது.

பிறகு அதன் இடப் பக்க இறக்கை செயலிழந்ததால் விமானம் விபத்துக்குள்ளானது.மருத்துவமனைக்குச் சென்றவுடன் விமானி மாண்டதாக CNN செய்தி நிறுவனம் கூறியது.அவரது பெயர் தெரிவிக்கப்படவில்லை.விபத்துக்கான காரணமும் தெளிவாகத் தெரியவில்லை.விபத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என CNN குறிப்பிட்டது.

Join Our WhatsApp Group